காந்தி ஆஸ்ரமம் புதிய கட்டிட திறப்பு விழா
திருச்செங்கோடு அருகே காந்தி ஆஸ்ரமம் புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.;
காந்தி ஆஸ்ரமம்புதிய கட்டிட திறப்பு விழா
திருச்செங்கோடு அருகே காந்தி ஆஸ்ரமம்புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.
திருச்செங்கோடு அருகே காந்தி ஆஸ்ரமம்புதிய கட்டிட திறப்பு விழா தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. பொருளர் குமார் வரவேற்றார். கதர்பவன் புதிய விற்பனை மைய கட்டிடத்தையும், கல்வெட்டையும் மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்தனர்.
முருகன் பேசியதாவது:
இங்கு வந்த மகாத்மா காந்தி அவர்களையும், 9 ஆண்டுகள் தங்கியிருந்த ராஜாஜி அவர்களையும் நினைவு கூர்வோம். கக்கன், காமராஜ் உள்ளிட்ட இன்னும் பல தலைவர்கள் வந்துள்ளனர். இதனை நிர்வகித்து வரும் அனைவருக்கும் பாராட்டுக்கள். இந்த காதிபவன் பல பேருக்கு இங்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருகிறது. இங்குள்ள அருங்காட்சியகம் அனைவரும் காண வேண்டியது. 1.50 லட்சம் கோடி அளவிற்கு காதி வியாபாரம், பிரதமர் நரேந்திரமோடி வந்த பின் வியாபாரம் உயர்ந்துள்ளது. விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் அறிவித்து, கிராமத்தொழில் வளர அரும்பாடு பட்டுவரும் தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஆஸ்ரமத்தின் நூற்றாண்டு நாணயம் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.பி. மாதேஸ்வரன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம், பா.ஜ.க. மாவட்ட செயலர் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.