குமாரபாளையம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி வழிபாடு!

குமாரபாளையம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி வழிபாடு நடந்தது.;

Update: 2024-11-02 14:30 GMT

கந்தசஷ்டியையொட்டி குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் வள்ளி தேவ சேனா சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி வழிபாடு

குமாரபாளையம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி வழிபாடு நடந்தது.

கந்தசஷ்டி விழாவையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். அரோகரா என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர்.

இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், தம்மண்ணன் வீதி தேவாங்கர் மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் வள்ளி தேவ சேனா சுப்ரமணிய சுவாமி கோவில், அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Similar News