கூலி தொழிலாளியின் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய சேர்மன்

குமாரபாளையத்தில் கூலி தொழிலாளியின் கண் அறுவை சிகிச்சைக்கு சேர்மன் விஜய் கண்ணன் நிதி உதவி வழங்கினார்.

Update: 2022-08-05 16:30 GMT

குமாரபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின்  கண் அறுவை சிகிச்சைக்கு நகராட்சி  சேர்மன் விஜய்கண்ணன் நிதி உதவி வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி  32வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது38.) கூலி தொழிலாளி. இவர் தனது கண் அறுவை சிகிச்சைக்கு வசதி இல்லாமல் இருந்து வருவதாக சேர்மன் விஜய்கண்ணன் அறிந்தார். இதனை தொடர்ந்து அவரது சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவியினை வழங்கினார். அப்போது கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கோவிந்தராஜ், கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News