வெயிட் லிப்டிங் போட்டியில் கலந்து கொள்ள மாணவனுக்கு நிதி வழங்கிய குமாரபாளையம் திமுகவினர்

கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான வெயிட் லிப்டிங் போட்டியில் கலந்து கொள்ள மாணவனுக்கு நிதி வழங்கிய குமாரபாளையம் திமுகவினர்;

Update: 2021-09-14 05:58 GMT

குமாரபாளையம் மாணவனுக்கு வெயிட் லிப்டிங் போட்டியில் கலந்து கொள்வதற்வதற்கு நிதியுதவி அளித்த திமுகவினர்

நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் நகரம் 3வது வார்டு பகுதியை சேர்ந்த கௌதம் என்ற மாணவன், கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான வெயிட் லிப்டிங் போட்டியில் கலந்து கொள்வதற்கு நிதி பற்றாக்குறை தடையாக இருந்தது. இதனை அறிந்து திமுக நகர பொறுப்புக் குழு உறுப்பினரும் 33வது வார்டு செயலாளரும் முன்னாள் நகர இளைஞரணி துணை அமைப்பாளரான O.R.S @ O.R.செல்வராஜ் மற்றும்  3வது வார்டு பிரதிநிதி சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது

நிதி வழங்கும் நிகழ்ச்சியில், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் R.N.ஆனந்தன், M.செந்தில்குமார், M.சரவணன் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் M.H.ஜீல்பி ஹார் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் S.அசோக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் குட்டி சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் 23வது வார்டு செயலாளர் ஆறுமுகம், 30வது வார்டு பொறுப்பாளர் செல்லவேல், 8வது வார்டு சஷ்டி T.விஜயகண்ணன், 10வது வார்டு பிரதிநிதி பிரகாஷ், 12வது வார்டு குமாரராஜா-பத்திர எழுத்தாளர், 3வது வார்டு S.N.R.நாகராஜ், 2வது வார்டு உறுப்பினர் வேலுமணி, 3வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் விக்கி, 10வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் தனுஷ், 23வது வார்டு ஆயில் கந்தசாமி, 3வது வார்டு விவேக் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News