ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது;
நிகழ்வின் தலைப்பு : முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
நிகழ்விடம் : செந்தூர்ராஜா அரங்கம்
நிகழ்ச்சி நடந்த தேதி : ஆகஸ்ட் 30
நிகழ்ச்சி நடந்த நேரம் : காலை 10 மணி, புதன்கிழமை
தலைமை : முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்
கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)
முன்னிலை : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் எஸ்.மங்கையர்கரசி
வரவேற்புரை :
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் எஸ்.மங்கையர்கரசி
சிறப்பு விருந்தினர் :
திரு.S.ஸ்ரீ ஓம் சரவணா,
நிர்வாக இயக்குநர், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள்
தலைமை உரை :
முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்
கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)
சிறப்பு விருந்தினர் உரை : திரு.S.ஸ்ரீ ஓம் சரவணா, ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர்
பங்குபெற்றோர் விபரம் : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பிற கல்லூரி மாணவர்கள்
நிகழ்வின் முக்கியத்துவம்
மாணவர்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும், இலட்சியத்தையும் வரையறுத்து அதை அடைவதற்கான குறிக்கோளோடு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்றும் உலகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த மூன்று தலைமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விட மிக வேகமான மாற்றம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. எனவே வேகமாக வளரும் மாற்றங்களை எதிர்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சிறந்த திறன்களை வளர்ப்பது போல் தங்கள் சிறந்த குண நலன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இக்கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட தரமான கல்வி சூழலை வழங்குவதில் உறுதி கொண்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் அனைத்து விதத்திலும் சிறந்த வல்லுனர்களாக பட்டம் பெற்று வருவதற்கு தேவையான வாய்ப்புகள் தரப்படுகிறது.
நன்றியுரை :
முனைவர் ஏ.டி.சசிகலா
உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
ஆங்கிலத் துறை