குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடை; ஜவுளி உற்பத்திகள் பாதிப்பு

குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் ஜவுளி உற்பத்திகள் பாதிக்கப்பட்டு, மக்கள் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

Update: 2021-09-02 14:45 GMT

பைல் படம்.

குமாரபாளையம் நகரில் சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர், பெராந்தர்காடு, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளது. மின்தடையால் ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக எந்த நிறுவனங்களும் செயல்பட முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியானது.

இங்கு வேட்டி, கர்சீப், துண்டு, உள்ளிட்ட ரகங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மின் தடையால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களின் வருமானம் பாதித்து, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

எனவே மின் வாரிய அதிகாரிகள் இது குறித்து சிறப்பு கவனம் செலுத்தி மின் தடை எந்த பகுதியிலும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News