விடியல் ஆரம்பம் சார்பில் ஓராண்டு இலவச யோகா பயிற்சி துவக்கம்
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் ஓராண்டு இலவச யோகா பயிற்சி நேற்று துவக்கப்பட்டது.;
உலக யோகா தினத்தையொட்டி குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி தொடக்க பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் நடத்தப்பட்ட இலவச யோகா பயிற்சியை எஸ்.ஐ. சந்தியா தொடங்கி வைத்தார்.
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் ஓராண்டு இலவச யோகா பயிற்சி நேற்று துவக்கப்பட்டது.
உலக யோகா தினத்தையொட்டி குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி தொடக்க பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் இலவச யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி ஓராண்டுக்கு வழங்கப்படும். எஸ்.ஐ. சந்தியா யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். யோகா பயிற்சியை யோகா பயிற்சியாளர் உஷா வழங்கவுள்ளார்.
யோகா பற்றி மூத்த பயிற்சியாளர்கள் கூறியதாவது:
யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.
யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. மேலும் யோகா வஜ்ரயான மற்றும் திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.
யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. . சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன.. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதில் கோபாலகிருஷ்ணன், தீனா, பன்னீர், ஆகியோர் பங்கேற்றனர்.