630 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா

குமாரபாளையம் அருகே 630 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா;

Update: 2024-09-23 16:30 GMT

 630 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா

குமாரபாளையம் அருகே 630 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா

பவானி பிரபாத் நாராயணன் சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பாக ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கி வருகிறார்கள். 20ஆம் ஆண்டு விழாவாக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி. சண்முகம், குமாரபாளையம் ஜே.கே.கே.முனிராஜா கல்வி நிறுவன தாளாளர் ஜெயபிரகாஷ், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், பவானி தி.மு.க. நகர செயலர் நாகராஜன், பவானி அ.தி.மு.க. நகர செயலர் தண்டாயுதபாணி, ஆகியோர் பங்கேற்று, பவானி மற்றும் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் 630 நபர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினார்கள். இதில் டி.எஸ்.பி. சண்முகம் பேசியதாவது:

மாணவ-மாணவிகளுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்ப்பிக்க வேண்டும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தங்களின் கண்காணிப்பு மற்றும் அரவணைப்பில் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பவானி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மாதேஸ்வரன், ராமராஜ், ஜோதிமுருகன், செல்வம், சீனிவாசன், நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.

குமாரபாளையம் அருகே 630 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சிருடை வழங்கும் விழா நடந்தது.

Tags:    

Similar News