குமாரபாளையத்தில் இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம்
குமாரபாளையத்தில் இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில், பள்ளிபாளையம் சாலையில் உள்ள அர்ணவ் பொதுநல அமைப்பின் சார்பில், இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது. டாக்டர் நரேஷ் தனக்கோடி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பங்கேற்று, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் எலும்பு கணிம அடர்த்தி சோதனை, இரத்த சர்க்கரை அளவு, கால் மூட்டு மற்றும் தோள் பட்டை வலி, கழுத்து, முதுகு மற்றும் தண்டுவட வலி, மூட்டு தேய்மானம், ஜவ்வு பிரச்சனைகள், எலும்பு முறிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர்.