தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்..!

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.;

Update: 2023-11-23 11:00 GMT

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார். இதில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் 288 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இதில் ரத்த கொதிப்பு, ரத்த வகை கண்டறிதல், ஈ.சி.ஜி, சர்க்கரை அளவு பார்த்தல், கண் பார்வை பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தூய்மை இந்தியா திட்டம் சார்பில் தூய்மையே எங்களின் சேவை பணிகள் ம குமாரபாளையத்தில் அனைத்து வார்டுகளில், வார்டுக்கு இரண்டு இடங்கள் வீதம் 66 இடங்களில் நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சிகளின் நிர்வாக சேலம் மண்டல இயக்குனர், அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.

இதில் துப்புரவு பணி, குப்பை தேங்கியுள்ள இடத்தை தூய்மை செய்து கோலமிடுதல், பேருந்து நிலையத்தை தூய்மை செய்தல், அங்கன்வாடி வளாகத்தை தூய்மை செய்தல், கோவில் வளாகம், சமுதாய கழிவறைகள், ஆற்று படுகைகள் ஆகிய இடங்களில் தூய்மை பணிகள் செய்து கோலமிடபட்டது.

இதில் ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சந்தனகிருஷ்ணன், ஜான்ராஜா, பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், குடியிருப்போர் நலச்சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர், அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்கள் பங்களிப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News