இலவச மருத்துவ முகாம். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு
குமாரபாளையம் அரிமா சங்கம், அரிமா மாவட்டம் தலைமை பண்பு பயிலரங்க அறக்கட்டளை மற்றும் கோவை ஜெம் மருத்துவமனை இணைந்து குமாரபாளையம் தனியார் பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.;
இலவச மருத்துவ முகாம்.
பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பு
குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாம். நடந்தது.
குமாரபாளையம் அரிமா சங்கம், அரிமா மாவட்டம் தலைமை பண்பு பயிலரங்க அறக்கட்டளை மற்றும் கோவை ஜெம் மருத்துவமனை இணைந்து குமாரபாளையம் தனியார் பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
குமாரபாளையம் அரிமா சங்க தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார். விழாவை நகர் மன்ற தலைவர் விஜய் கண்ணன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் கோவை ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பார்த்தசாரதி தலைமையில், டாக்டர்கள் விவேகானந்தன், பிரஜோத், தினேஷ், ராகுல், தினேஷ், சக்திமதுபாலாஆகியோர் பங்கேற்றனர். இந்த முகாமில், உணவுக் குழாய், இரைப்பை, குடல் இறக்கம், கர்ப்பப்பை கோளாறுகள், பித்தப்பை கற்கள், மலக்குடல், பெருங்குடல், கல்லீரல், குடல் புண், மூலம், கணைய அலர்ஜி, மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைப்பட்டோருக்கு ஸ்கேன் மற்றும் எண்டாஸ்கோபி மற்றும் மருந்து மாத்திரைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுமார் 400 பேர் பங்கேற்று ஆலோசனைகளை பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை குமாரபாளையம் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விழா ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அரிமா சங்கம், அரிமா மாவட்டம் தலைமை பண்பு பயிலரங்க அறக்கட்டளை மற்றும் கோவை ஜெம் மருத்துவமனை இணைந்து குமாரபாளையம் தனியார் பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.