குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் இலவச மருத்துவ முகாம்
குமாரபாளையம் ஆதரவற்றோர் மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில், இலவச மருத்துவ சிகிச்சை முகாம், அமைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் நடைபெற்றது. இதில், டாக்டர் ரஹானா ரஹிதா தலைமையிலான மருத்துவக்குழுவினர் பங்கேற்று சிகிச்சை வழங்கினர்.
ரத்த அழுத்தம், ரத்த வகை கண்டறிதல், கண், காது, மூக்கு தொண்டை, இருதயம், சர்க்கரை நோய், குழந்தைகள் சிகிச்சை, பெண்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.