குமாரபாளையத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம்

குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம் நடைபெற்றது.;

Update: 2023-01-29 11:00 GMT


குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. கண்ணில் புரை உண்டாகுதல், மாறு கண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், நீர் வடிதல், கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். மாத்திரைகள், ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

ரத்ததான முகாமில் 92 பேர் ரத்ததானம் செய்தனர். ஈரோடு சுப்ரீம் ரத்த வங்கி அரசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் சேவையில் பங்கேற்றனர். சங்க தலைவர் மாதேஸ்வரன், கோகுல்நாத், சுந்தரராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கண் சிகிச்சை முகாம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

கண் மருத்துவம் அல்லது கண்ணியல் என்பது கண் தொடர்பான நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளைக் குறிக்கும் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையின் பிரிவினைக் குறிப்பதாகும். கண் மருத்துவர் என்பவர் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரைக் குறிப்பதாகும். மருத்துவத்தில் பட்டமும், அதைத் தொடர்ந்து கண் மருத்துவத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் உறைவிடப் பயிற்சியும் பெற்று இருப்பர். கண் மருத்துவத்திற்கான உறைவிடப் பயிற்சி திட்டங்களுக்கு உள் மருத்துவம், குழந்தை மருத்துவம் அல்லது பொது அறுவை சிகிச்சை ஆகியவற்றில் பயிற்சியுடன் ஒரு வருட உள்ளகப் பயிற்சியும் தேவைப்படலாம். கண் நோயியலின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கூடுதல் சிறப்புப் பயிற்சி பெறப்படலாம்.

கண் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், தேவைப்படும்போது அறுவை சிகிச்சை செய்வதற்கும் கண் மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கண் மருத்துவர்கள் கண் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய கல்வி ஆராய்ச்சியில் பங்கேற்கலாம்.

கண் மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்படும் பொதுவான நோய்களின் ஒரு பகுதி பட்டியல் பின்வருமாறு:-

கண்புரை,கண்ணீர் குழாய் அடைப்பு, கண் துருத்தம்,கண் கட்டிகள்,நீரிழிவு விழித்திரை நோய்,உலர் கண் நோய்க்குறிகண் அழுத்த நோய்விழிப்புள்ளிச் சிதைவுஒளிவிலகல் பிழைகள்மாறுகண் (கண்களின் தவறான அமைப்பு அல்லது விலகல்)கருவிழிப்படல அழற்சிநோய் கண்டறிதல்

கண் பரிசோதனையின் போது செய்யப்படும் பரிசோதனை முறைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

உள்விழி அழுத்தத்தை தீர்மானிக்க கண் அழுத்த அளவி, ஒளிவிலகல் மதிப்பீடு,விழித்திரை பரிசோதனை,பிளவு விளக்கு பரிசோதனை,பார்வைத் திறன் குறைபாடு.

இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரான சுஷ்ருதர் சுமார் ஆறாவது நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் சுஷ்ருதாவை சம்ஹிதா எனும் நூலினை எழுதினார். அதில் 76 விழியின் நோய்கள் விவரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல கண் சார்ந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அவர் முதல் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News