அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது;
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ முகாமை தொடக்கி வைத்தார். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது.
இதில் 220பேர் பங்கேற்று பயன்பெற்றனர். முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர், முன்னாள் தலைவர்கள் மனோகர், சம்பத்குமார், சந்திரன், பன்னீர்செல்வம், தனசேகர், சண்முகம்,விஜயபிரதாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.