அரசு ஆண்கள் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.
நகர தி.மு.க. செயலர் செல்வம் பங்கேற்று 258 இலவச சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தி பேசியதாவது:அரசு சார்பில் சைக்கிள்கள் வழங்கப்படுவது நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் நமது பள்ளி முதலிடம் பிடித்தது என்ற நல்ல பெயரை பெற்றுத்தருவதுதான் நீங்கள் அரசுக்கு செய்யும் பிரதி உபகாரமாகும் என்று குறிப்பிட்டார். பி.டி.ஏ. தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் அன்பரசு, பொருளர் சுப்பிரமணி, விடியல் பிரகாஷ், கவுன்சிலர்கள் தீபா, அம்பிகா, நிர்வாகிகள் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன்,என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி, ஆசிரியர் கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.