பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

குமாரபாளையம் அருகே பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்;

Update: 2025-01-02 15:45 GMT

பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் அருகே பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், தட்டாங்குட்டை, சமய சங்கிலி, களியனூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 2 கோடி 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளான, வடிகால் அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல், காங்கிரீட் தளம் அமைத்தல், சமுதாய சுகாதார வளாகம் கட்டுதல், பெண்கள் பள்ளியில் கழிப்பறை கட்டுதல், குடிநீர் குழாய்கள் சீரமைத்தல், வகுப்பறை கட்டிடம் கட்டுதல், அரசு பள்ளிக்கு பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள், பார்வையிடுதல் மற்றும் நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சருக்கு, பொது மக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவி புஷ்பா,, தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் செந்தில், குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News