அரசு ஆண்கள் பள்ளி பூமி பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.;

Update: 2022-09-23 15:30 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருந்ததால் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து சமூக விரோத செயல்களை செய்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பல நடவடிக்கைகள் எடுத்தும் பலனில்லை. இதற்கு நிரந்தர தீர்வாக சுற்றுச்சுவர் உயர்த்தி கட்ட முடிவு செய்யப்பட்டது. இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் கூற, அவர் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

இதன்படி நேற்று பள்ளி வளாகத்தில் பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்தார். இதில் நகர செயலர் பாலசுப்ரமணி, நகர அவைத் தலைவரும் கவுன்சிலருமான பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுணன், சிங்காரவேல், நகைக் கடை சேகர், பி.டி.ஏ. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News