குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைப்பு
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.;
கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆண்டுதோறும் குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நீர் மோர் பந்தல் திறந்து வைப்பது வழக்கம்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் நீர் மோர் பந்தல் திறப்பு விழா அ.தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், முலாம்பழம், இளநீர், குளிர்பானங்கள், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் நகர தலைவர் பழனிச்சாமி, நகர செயலர் பாலசுப்ரமணி, துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலர் குமணன், கவுன்சிலர் புஷோத்தமன், பொருளர் பாஸ்கர், இணை செயலர் அமுதா, மாவட்ட பிரதிகள் ரவி, மணிமேகலை, வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.