குமாரபாளையத்தில் சினிமா தியேட்டர்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் 2 சினிமா தியேட்டர்களை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.;
2 சினிமா தியேட்டர்கள் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் 2 சினிமா தியேட்டர்களை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலையில் கே.ஒ.என்.தியேட்டர் என்று செயல்பட்ட சினிமா தியேட்டர் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு, டி.என்.சி. எனும் பெயரில் ஸ்க்ரீன் 1, ஸ்கிரீன் 2 என்ற இரண்டு தியேட்டர்களாக மாற்றம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா நிர்வாகி இளங்கோ தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். இவர் வாழ்த்தி பேசியதாவது:
இரண்டு நாள் முன்னதாக நடப்பதாக இருந்த விழா, எனக்காக ஒத்தி போட்டு இன்று நடைபெறுகிறது. இதிலிருந்து உரிமையாளரின் நல்ல மனம் அனைவருக்கும் தெரியும். இவர் மனம் போல் இந்த தியேட்டர்கள் வளர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. சேகர், நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி,உள்பட பலரும் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் 2 சினிமா தியேட்டர்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.