உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

உக்ரைன் நாட்டில் படிக்கும் குமாரபாளையம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் ஆறுதல் கூறினார்.

Update: 2022-03-01 13:15 GMT

உக்ரைன் நாட்டில் படிக்கும் குமாரபாளையம் மாணவர் சூர்யாவின் பெற்றோர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் ஆறுதல் கூறினார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், வட்டமலை பகுதியில் ஓட்டல் கடை வைத்து தொழில் செய்து வருபவர் இளங்கோ, 43. இவரது மனைவி இளவரசி, 38. இவர்களுக்கு சூர்யா, 21, என்ற மகன், தர்சினி, 15, என்ற மகள் உள்ளனர். தர்சினி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சூர்யா உக்ரைன் நாட்டில் DNIPROPETROVSK மெடிக்கல் அகாடமி என்ற மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது போர் நடந்து வரும் நிலையில் அங்கு சூர்யா மற்றும் அவரது தமிழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் இந்தியா வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மத்திய, மாநில அரசின் ஏற்பாட்டின் பேரில் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, மல்லிகா தம்பதியர் மகன் சபரிபிரதீப், 27, என்பவர் உக்ரைன் நாட்டில் கார்கியோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 6வது இறுதியாண்டு படித்து வருகிறார். அவரும் தாய்நாடு திரும்ப வழியில்லாமல் இருந்து வருவதால், அவரது வீட்டிற்கு சென்று தங்கமணி ஆறுதல் கூறினார்.

இவருடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், தட்டான்குட்டை ஊராட்சி செயலர் குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News