குமாரபாளையத்தில் முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு தினம்; ஏற்பாடுகள் தீவிரம்

குமாரபாளையம் முன்னாள் நகர மன்ற தலைவரின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை (31ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

Update: 2021-08-30 13:45 GMT

குமாரபாளையம் முன்னாள் நகர மன்றத் தலைவர் சேகர்.

குமாரபாளையம் நகர மன்ற தலைவராக, நகர தி.மு.க. செயலராக, மாவட்ட தி.மு.க. துணை செயலராக பணியாற்றி வந்தவர் சேகர். இவர் ஊர் பொதுமக்களின் குறைகளை போக்க யார் அழைத்தாலும் ஓடி வந்து உதவி செய்யக்கூடிய நல்ல நபராக திகழ்ந்தார்.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ல் உடல்நலக்குறைவால் சேகர் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு குமாரபாளையம் நகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், விசைத்தறி, கைத்தறி கூடங்கள், சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைவரும்  தாமாக முன்வந்து தங்கள் நிறுவங்களை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 26 ஆண்டுகளுக்கு முன் நகர காங்கிரஸ் கட்சி தலைவர், ஆன்மீகவாதி, நடிகர் சிவாஜியின் நெருங்கிய நண்பர், ஜே.கே.கே. நடராஜா கல்வி நிலையங்களின் நிறுவனர், நகரின் கொடைவள்ளலுமான நடராஜா செட்டியார் மறைவின் போதுதான் இப்படி அனைத்து வணிக நிறுவனத்தாரும் தாங்களாக முன்வந்து தங்கள் நிறுவனங்களை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், முன்னாள் நகர மன்ற தலைவர் சேகரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. குமாரபாளையம் நகர தி.மு.க சார்பில் பொறுப்பாளர் செல்வம் தலைமையில் அவரது படத்திற்கு மலரஞ்சலி  செலுத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நகரின் அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதேபோல் தி.மு.க. நிர்வாகியும், சேகரின் நண்பருமான செல்வராஜ் தலைமையில் 33 வார்டுகளில் சேகரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News