ஒ.பி.எஸ். அணியில் சேரும் முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள்
முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள் ஒபிஎஸ் அணியில் சேரவுள்ளதாக கூறபடுகிறது.;
குமாரபாளையம் முன்னாள் நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன், கவுன்சிலர்கள், அவரது கணவன்மார்கள் உள்பட கட்சி விதி மீறி செயல்பட்டதாக கூறி 7 பேரும் அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
வரும் புதன்கிழமை ஓ.பி.எஸ். முன்னிலையில் கட்சியில் இணைவதாக கூறப்படுகிறது. இவர் சேர்ந்தால் இவரது ஆதரவாளர்கள் பலரும் ஓ.பி.எஸ். அணியில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குமாரபாளையம் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.