குமாரபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் பிறந்தநாள் விழா
குமாரபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
ஓமந்தூரரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கபட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசாக புத்தங்கங்களை டாக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.
டாக்டர் சண்முகசுந்தரம், ஓமந்தூரார் குறித்து பேசுகையில், சென்னை மாகாண அரசியலில் பெருமைக்குரியவராக விளங்கியர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆவார். அரசியலில் நாணயம், ஒழுக்கம், எளிமை, பொறுப்புணர்ச்சி, கடமை தவறாமை இப்படிப்பட்ட தவக்குணங்கள் பெற்று விளங்கியவர்கள் மிகச் சிலரே.
அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராகவும், பின்னாளில் காமராஜ் அவ்வளவு குணங்களையும் தன்னகத்தே எற்றுக் கொண்டவராக விளங்க அவருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் இந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தான். இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண முதல்வர் என்ற முறையில் கொடியேற்றும் உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது.
இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும், 1952ல் ராஜாஜியும் 1954ல் காமராஜ் அவர்களும் பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும், ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை ஆசிரியை கவுசல்யாமணி, நிர்வாகிகள் அங்கப்பன், மணிகிருஷ்ணா, சதீஷ், தன்னார்வலர் மதுமிதா உள்பட பலர் பங்கேற்றனர்.