முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
பஸ் ஸ்டாண்ட் எதிரில் தி.மு.க. நிர்வாகி ஒ.ஆர்.எஸ். என அழைக்கப்படும் செல்வராஜ் தலைமையில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கபட்ட கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் அதிபர் விஜய் கண்ணன் மற்றும் நிர்வாகிகளும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மற்றும் 33 வார்டுகளில் கருணாநிதியின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் அன்பழகன், அன்பரசு, பழனிவேல், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னாள் நகர செயலர் வெங்கடேசன் தலைமையில் ஆர்.ஏ.எஸ். தியேட்டர் அருகில் வண்ண பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மூத்த நிர்வாகி தி.கு.சண்முகம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பஸ் ஸ்டாண்ட் எதிரில் தி.மு.க. நிர்வாகி செல்வராஜ் தலைமையில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கபட்ட கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு ரியல் எஸ்டேட் அதிபர் விஜய் கண்ணன் மற்றும் நிர்வாகிகளும் அன்னதானம் வழங்கினர். முன்னாள் கவுன்சிலர் ராமசாமி தலைமையில் காவேரி நகர் பகுதியில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.