கைப்பந்து வீரர்களுக்கு சீருடை வழங்கினார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன்
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் கைப்பந்து வீரர்களுக்கு சீருடை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் இன்றும் நாளையும் மேற்கு மண்டலங்களுக்கு இடையேயான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் நாமக்கல் மாவட்ட கைப்பந்து அணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். வீரர்களுக்கு குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் சீருடைகள் வழங்கி வாழ்த்தினார். இதில் நாமக்கல் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் சக்திவேல், செயலர் மற்றும் மாநில இணை செயலர் சதாசிவம், நிர்வாகி கனகராஜ், செல்வராஜ், செந்தில்குமார், அழகேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.