குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

Update: 2023-05-13 12:15 GMT

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில்  மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் மாணவர்களுக்கு

ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாய்ஸ் கிளப் என்ற ஒரு அமைப்பு அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் நிலையம்  என்றால் மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட கூடாது என்ற எண்ணத்தில், குமாரபாளையம் போலீஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் விளையாட்டு அரங்கம் ஏற்படுத்தப்பட்டது.

அதில் தினமும் பள்ளி நேரம் முடிந்து மாணவ, மாணவியர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து கேரம், செஸ், இறகு பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளை விளையாடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இல்லம் தேடி கல்வி அமைப்பின் தன்னார்வலர் சித்ரா, ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் பயிற்சி வழங்கினர். எஸ்.ஐ. தங்கவடிவேல் தலைமை வகித்தார். பயிற்சியின் முடிவில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மாணவர்களை போலீஸ் ஸ்டேஷன் உள்ளே அழைத்து சென்று போலீஸ் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன.

அரசு பள்ளிகளில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் துவங்கப்பட்டு, மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் நாராயண நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை பாரதி தலைமையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.ஐ. குணசேகரன் பரிசுகள் வழங்கினர். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News