குமாரபாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பாலம் திறப்பு

குமாரபாளையத்தில் புதியதாக கட்டப்பட்ட பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

Update: 2022-07-05 15:15 GMT

குமாரபாளையத்தில் புதியதாக கட்டப்பட்ட நாராயண நகர் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் இருந்து நாராயண நகர் செல்லும் வழியில் கோம்பு பள்ளம் உள்ளது. இதனை கடக்க இருந்த பழைய பாலம் மிகவும் சேதமானதால் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் பல மாதங்கள் நீடித்தது. இதனால் பொதுமக்கள் வெகு தூரம் சுற்றி வரும் நிலைக்கு ஆளாகினர். இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News