குமாரபாளையத்தில் டீக்கடை, உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் காலாவதியான குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்திட திடீர் ஆய்வு.
குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் காலாவதியான குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்திட திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரி, ஓட்டல்கள் ஆகியவற்றில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் காலாவதியான குளிர்பானங்கள், பால், தயிர் உள்ளிட்ட 56 லிட்டர் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத உணவுப்பொருள் பாக்கெட்டுகள் 45 கிலோ கைப்பற்றப்பட்டு 6 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 2 கிலோ கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோ, சிங்காரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து டாக்டர் அருண் கூறியதாவது:- கோடைக்காலம் ஆரம்பிக்கப்பட இருப்பதால் காலாவதியான குளிர்பானங்கள் கண்டறிந்து தொடர்நடவடிக்கை எடுத்து வருகிறோம். காலாவதியான உணவுப் பொருட்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆகியவற்றையும் கைப்பற்றி அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.