உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குமாரபாளையம் உணவகங்களில் ஆய்வு
குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சார்பில் ஓட்டல் கடையில் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சார்பில் ஓட்டல் கடையில் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஓட்டல் கடைகளில் பழைய உணவு விற்பதாக உணவு பாதுகாப்பு துறையினர்களுக்கு தகவல் கிடைத்தது. சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஒரு ஓட்டல் கடையில் பழைய கறிகள், பிரியாணி விற்பனை செய்கிறார்களா? என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கநாதன் நேரில் ஆய்வு செய்தார். இங்கு பத்து கிலோ பழைய கோழி இறைச்சி, பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதுடன் மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது போல் இது போல் விதி மீறும் ஓட்டல் கடையினர் மீது நடவடிக்கை தொடரும் என ரங்கநாதன் கூறினார்.
குமாரபாளையத்தில் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். இது தவிர மேலும் 43 பேர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறி வருவதுடன், மாவட்டம் முழுதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய உத்திரவிட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் க்ரில் சிக்கன் 9 கிலோ, குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட பிரியாணி 4 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 25 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அபராதமாக 7 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர சாலைகளில், தள்ளுவண்டிகளில் சில்லி சிக்கன், சில்லி மீன், முழு மீன் ரோஸ்ட் என பல வகைகளில் வியாபாரம் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இது போன்ற கடைகள் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ளன. இவைகள் பழைய மீன்களா? என உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பல ஓட்டல் கடைகளில் முதல் நாள் போட்ட புரோட்டாக்கள் மறுநாள் சூடு செய்யப்பட்டு விற்கபடுகிறது. இது போன்ற கடைகளில் பழைய எண்ணெய் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
இதனால் வயிறு சம்பந்தமான பல நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகிறார்கள். கூலி வேலைக்கு சென்று, சிறுக சிறுக உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை இது போன்ற தரமற்ற சில கடைகளில் உணவுப்பொருட்களை உண்டு பலரும் நோயால் பாதிக்கப்படும் நிலை எற்படுகிறது. இந்நிலை இனியும் தொடராதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.