குமாரபாளையம் ஓட்டல், பேக்கரி கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் சோதனை
குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி, டீ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் ஆய்வு செய்தார்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி, டீ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் ஆய்வு செய்தார்.
இது பற்றி குமாரபாளையம் உணவுப்பொருள் ஆய்வாளர் இளங்கோ கூறும்போது
குமாரபாளையம் நகரில் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி, டீ கடை, மளிகை கடை உள்ளிட்ட பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தரமில்லாத உணவு பொருள் விற்பனை, காலாவதியான உணவு பொருட்கள், கடை உரிமம் புதுப்பித்தல் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதி மீறியவர்களிடம் எச்சரிக்கை செய்யப்பட்டது என்றார்.