கள்ளிப்பாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் விழா
குமாரபாளையம் அருகே கள்ளிப்பாளையம் காளியம்மன்,மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் அருகே கள்ளிப்பாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் விழா நடைபெற்றது.
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன் கோவிலில் பிப். 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.நேற்று காலை 06:00 மணியளவில் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலத்துடன் சக்தி அழைப்பு வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து மகா குண்டம் பூ மிதித்தல் விழா நடைபெற்றது. இதில் விரதம் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற மஞ்சள் ஆடையுடன் குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மார்ச் 10ல் மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெறவுள்ளது.