குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் மிளிரும் ஓவியங்கள்
குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.;
குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.
குமாரபாளையம் அரசு அலுவலகங்கள், நகராட்சி கட்டிடங்கள் ஆகியவற்றில் சினிமா போஸ்டர், இதர விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்களுக்கு காரணமாகிறது. ஆகவே விபத்துக்களை தடுக்கவும், அசுத்தமாக உள்ள சுவர்களை தூய்மை படுத்தவும் ஓவியங்கள் வரைய தளிர்பாரதம் பொதுநல அமைப்பினர் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதன்படி சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதி அரசு கட்டிடங்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டன.