மீன்பிடி ஏலத்தில் முன்விரோதம்: விஷம் கலந்த கோழி ஏரியில் வீசிய அவலம்

குமாரபாளையம் அருகே, மீன் பிடிப்பு ஏலத்தில் முன்விரோதம் காரணமாக, மர்ம நபர்கள் விஷம் கலந்த கோழி இறைச்சியை, ஏரியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.;

Update: 2021-10-19 14:00 GMT

குமாரபாளையம் அருகே, மீன் பிடிப்பு ஏலத்தில் முன்விரோதம் ஏற்படக் காரணமான நல்லாம்பாளையம் ஏரி.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்  அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில்,  அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர்,  மீன் பிடிக்க ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த எதிர்த்தரப்பினர்,  ஏரியில் உள்ள மீன்களை கொல்ல, குருணை மருந்து கலந்த கோழி இறைச்சியை,  ஏரியில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீன்களுக்கு உணவு வழங்க வந்த நபர்கள், கோழி இறைச்சிகள் கிடப்பது கண்டு, அதனை எடுத்து நாய் ஒன்றுக்கு கொடுத்துள்ளனர். இறைச்சி உண்ட நாய் சற்று நேரத்தில் இறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து, ஏலம் எடுத்த நபர்களிடம் கூறியுள்ளனர். ஏலம் எடுத்த நபர்கள்,  ஏரியில் வீசி சென்ற கோழி இறைச்சிகளை சேகரித்து அகற்றினர். இது குறித்து,  குமாரபாளையம் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News