மீன் பிடிக்க வெடிகள் வீசியபோது மீனவரின் இரு கைகள் துண்டிப்பு

பவானி அருகே, மீன் பிடிக்க வெடிகள் வீசிய போது மீனவர் கைகள் துண்டானது.

Update: 2021-10-20 03:00 GMT

சித்தோடு அடுத்த ஆர்.என்.புதூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் காளியப்பன், 40. மீனவர். காவிரி ஆற்றில் பரிசலில் சென்று நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க முயன்றார். வெடிகளை வீச முயன்ற போது, அவரது  கையிலேயே வெடித்து சிதறியது.

இதில் காளியப்பனின் இரு கைகளும் துண்டாயின. மேலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். வெடி சத்தம் கேட்ட சக மீனவர்கள், உடனடியாக காளியப்பனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News