ஊரடங்கு தளர்வு: களை கட்டாத மீன் வியாபாரம், வியாபாரிகள் கலக்கம்

முழு தளர்வு அறிவிக்கபட்டு நிலைமை சீரடைய ஒரு சில மாதங்கள் ஆகும் என மீன் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்

Update: 2021-06-13 09:15 GMT

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மீன்,  இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றங்கரையோரம் ஏராளமான மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு  அனைத்து வகையான இறைச்சி கடைகளையும் திறக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.

தற்போது தொற்று பரவல் குறைவு காரணமாக இறைச்சி கடைகளை நேர கட்டுப்பாடுடன் திறக்க அனுமதித்துள்ளது.  இந்நிலையில் பள்ளிபாளையம் பகுதி முழுவதும் அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், ஊரடங்கு காரணமாக பொருளாதார சரிவை பொது மக்கள் சந்திப்பு வருவதாலும், மீன்  இறைச்சி கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மீன் விற்பனை வியாபாரி கூறியபொழுது, தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார பாதிப்பை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் கொரோனா அச்சமும் உள்ளதால் ஆடு,கோழி,மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்கி வாங்கிச் செல்ல மக்கள் அச்சபடுகின்றனர். இதனால்  கடைகளில்  மீன்கள் விற்பனை மந்தமாக நடக்கிறது.  நிலைமை சீரடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது என தெரிவித்தார் 

Tags:    

Similar News