குமாரபாளையம் அருகே அட்மா திட்டத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

குமாரபாளையம் அருகே உப்புக்குளம் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குனர் தலைமையில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2021-09-26 05:45 GMT

குமாரபாளையம் அருகே அட்மா திட்டத்தில் நடைபெற்ற மீன் வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகள்.

நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே அட்மா திட்டத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே உப்புக்குளம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற  மீன் வளர்ப்பு பயிற்சி முகாமை  வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வி தொடக்கி வைத்து பேசியதாவது:  திலேப்பியா மீன் வளர்ப்பது குறித்த தொழில் நுட்பங்களான மண் வளம், நீரின் தன்மை, மீன்களுக்கு வழங்க வேண்டிய உணவு, நோய் பராமரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு  தெளிவாக விளக்கிக் கூறினார். மேலும், விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் காமேஷ் பங்கேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் திட்டங்கள் குறித்து பேசினர். ஏற்பாடுகளை அட்மா தொழிநுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.



Tags:    

Similar News