குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை நடைபெற்றது.;
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் காது அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இது பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:- குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இதுவரை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை சம்பந்தமாக ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர், ராஜ்மோகன் வழிகாட்டுதல்படி, மாவட்ட அளவில் முதன்முதலாக காது அறுவை சிகிச்சை எண்டோஸ்கோபி மூலம் நடத்தபட்டது. மயக்கவியல் டாக்டர் அருண் உடனிருக்க, டாக்டர் பவித்ரா இந்த அறுவை சிகிச்சையை செய்தார்.
குமாரபாளையத்தை சேர்ந்த சண்முகம், 50 என்ற இரு காதுகளும் கேளாத நபருக்கு ஒரு காது மட்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். முதன்முதலாக காது அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பவித்ராவிற்கு, தலைமை டாக்டர் பாரதி,உடன் பணியாற்றும் டாக்டர்கள், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.