பாறைகளின் நடுவே சிக்கிய மாட்டை மீட்ட தீயணைப்பு படையினர்
குமாரபாளையம் அருகே பாறைகளின் நடுவே சிக்கிய மாட்டை குமாரபாளையம் தீயணைப்பு படையினர் மீட்டனர்.;
குமாரபாளையம் அருகே பாறைகளின் நடுவே சிக்கிய மாட்டை குமாரபாளையம் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 35, என்பவரது மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள பாறைகளின் நடுவே விழுந்து எழுந்திருக்க முடியாமல் சிக்கிக்கொண்டது.
இதன் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, சம்பவத்திற்கு வந்து பாறை இடுக்கில் சிக்கிய மாட்டினை பொக்லின் உதவியுடன் மீட்டனர். மாட்டினை உயிருடன் மீட்ட மீட்பு படையினரை அப்பகுதியினர் பாராட்டினர்.