பள்ளிபாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த உடும்பை மீட்ட தீயணைப்பு படையினர்
பள்ளிபாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த உடும்பை மீட்டு தீயணைப்பு படையினர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவித்தனர்.;
உடும்பை மீட்ட தீயணைப்புத்துறையினர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 47. இவருக்கு சொந்தமான லைன் வீட்டில் உள்ள ஒரு வீடு பல மாதங்களாக பூட்டியிருந்தது.
இந்நிலையில் அந்த வீட்டை திறந்து பார்த்தபோது, அங்கு உடும்பு படுத்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உனடியாக அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையிலான குழுவினர், உடும்பை பிடித்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் விடுவித்தனர்.