தீயணைப்பு படையினர் தீத்தொண்டு நாள் அனுஷ்டிப்பு
குமாரபாளையத்தில் தீயணைப்பு படையினர் தீத்தொண்டு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.;
தீயணைப்பு படையினர்
தீத்தொண்டு நாள் அனுஷ்டிப்பு
குமாரபாளையத்தில் தீயணைப்பு படையினர்
தீத்தொண்டு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் தீயணைப்பு படையினர்
தீத்தொண்டு நாள் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. பணியின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக, அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் பேசியதாவது:
தீயணைக்கும் பணி, மீட்பு பணி ஆகிய பணிகளில் அர்ப்பணிப்புடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் பணியாற்றி வருகிறார்கள். பல நண்பர்கள் பணியின் போது உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் சேவையே தங்கள் சேவை என்று பணியாற்றி வருகிறார்கள். தீத்தடுப்பு செயல்முறைகள் குறித்து ஆங்காங்கே முக்கிய இடங்களில் செயல்முறை விளக்கம் கொடுத்து வருகிறோம். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி, தீ விபத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் தீயணைப்பு படையினர்
தீத்தொண்டு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.