குமாரபாளையம் அருகே மினி டெம்போவில் தீ விபத்து

குமாரபாளையம் அருகே கோன் அட்டை ஏற்றி வந்த மினி டெம்போ தீயில் எரிந்து சேதமானது.

Update: 2022-02-20 03:16 GMT

தீயில் எரிந்து சேதமான மினி டெம்போ.

குமாரபாளையம் அருகே ரங்கனூர் நான்கு ரோடு, பெருமாள்கோவில்காடு பகுதியில் மினி டெம்போவில் கோன் அட்டை லோடு ஏற்றிக்கொண்டு அசோக்லேலண்டு தோஸ்த் என்ற மினி டெம்போ நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

இந்த மினி டெம்போவில் இருந்த கோன் அட்டையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினார். டெம்போவில் ஏற்றி வந்த கோன் லோடு முழுதும் தீயில் எரிந்து சேதமானது.

கோன் லோடு மதிப்பு 40ஆயிரம் என கூறப்படுகிறது. குமாரபாளையம், வெப்படை இரு போலீஸ் நிலைய எல்லைப்பகுதி என்பதால் போலீசார் வழக்குப்பதிவு தாமதமாகி வருகிறது. குமாரபாளையம் போலீசார் விசாரணையில் டெம்போவின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் பள்ளிபாளையம், காவேரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த சண்முகவேல், 42, என்பதும், ரங்கனூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தங்கவேலு சைசிங் மில்லில் இருந்து பள்ளிபாளையம் கொண்டு செல்வதற்காக கோன் அட்டை லோடு ஏற்றி சென்றார் என்பதும் தெரியவந்தது.

Tags:    

Similar News