பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து
குமாரபாளையம் அருகே பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து லாரி முழுவதும் எரிந்து சேதமானது.;
பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில்
திடீர் தீ விபத்து
குமாரபாளையம் அருகே பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து லாரி முழுவதும் எரிந்து சேதமானது.
குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் 30க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தி மற்றும் பாலிஸ்டர் மற்றும் செயற்ககை பஞ்சுகள், தேவையானதை போக மீதி உள்ளவற்றை தங்களின் கிடங்கில் சேமித்து வைப்பது வழக்கம். அது போல் வெப்படை அருகே உள்ள பாதரை பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் இருந்த செயற்கை பஞ்சுகளை லாரியில் ஏற்றி தங்களது சேமிப்புக் கிடங்கிற்கு லாரி மூலம் கொண்டு சென்றனர். லாரியினை சங்ககிரி அருகே உள்ள சாமுண்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த பொழுது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் புகை வருவதை கண்டு லாரியிணை நிறுத்திவிட்டு, பின்பகுதியில் பார்த்த பொழுது பஞ்சு தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் செல்வராஜ் நெடுஞ்சாலை பகுதியில் இருந்து தனியாக இருந்த வெட்டவெளிப்பகுதிக்கு கொண்டு சென்று தன்னால் முடிந்த அளவிற்கு தீப்பிடித்த பஞ்சுகளை தள்ளிவிட்டு உள்ளார். மேலும் அங்கு விவசாய கிணற்றில் இருந்த மோட்டார் மூலம் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தும் தீ கொழுந்து விட்டு எரிந்ததையடுத்து, வெப்படை தீயணைப்புத் துறையினர்க்கு தகவல் கொடுத்தபின், வெப்படை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பிச்சீயடித்து தீயை அணைக்க முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியாமல் கட்டுக்கடங்காமல் தீ வேகமாக பரவி லாரி முழுவதும் எரிந்து தீ க்கு இறையானது. இதில் மொத்தம் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் லாரி எரிந்து சேதம் அடைந்ததை அடுத்து வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து, செயற்கை பஞ்சு என்பதால் அதிக அளவில் கோடை வெயிலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படவிளக்கம் :
பள்ளிபாளையம் அருகே பஞ்சு லோடு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது.