குமாரபாளையத்தில் முகக்கவசம் அணியாத கடைகளுக்கு அபராதம்; வருவாய்துறை அதிரடி
குமாரபாளையத்தில் முகக் கவசம் அணியாத மளிகை, டீ கடையினருக்கு வருவாய்துறையினர் அபராதம் விதித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வணிக நிறுவன உரிமையாளர்களுடன் தாசில்தார், நகராட்சி ஆணையாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தி, வணிக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி மருந்து ஒவ்வொரு கடைகள் முன்பும் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகள் அறிவுறுத்தப்பட்டது. இதனை வணிக நிறுவனங்கள் பின்பற்றுகிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் உத்திரவிட்டார்.
அதன்படி குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன் மற்றும் போலீசார் ஆய்வு செய்து மளிகை, டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட பல கடைகளுக்கு ரூ. 1800 அபராதம் விதித்தனர்.