விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம்
குமாரபாளையம் அருகே விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
குமாரபாளையம் அருகே விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து விலங்குகள் வதை தடுப்பு எஸ்.ஐ. தர்மராஜன் கூறியதாவது: குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் விலங்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவைகளுக்கு பட்டினி தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாகவும் ஏற்றி, துன்புறுத்தல் செய்து விலங்குகளை கொண்டு செல்வது அறிந்து, வதை தடுப்பு சட்டத்தின் படி நான்கு ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். சேலம் குமார் 2 ஆயிரத்து 200, பொள்ளாச்சி சுரேஷ் 3 ஆயிரம், தாராபுரம் தண்டபாணி 3 ஆயிரம், ஒட்டன்சத்திரம் செல்லதுரை 2 ஆயிரத்து 800 ஆக மொத்தம் 11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார் என்று அவர் கூறினார்.