குமாரபாளையம் அருகே நிரம்பிய ஏரி: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
குமாரபாளையம் அருகே நிரம்பிய ஏரியால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.;
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஏரி நிரம்பியது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் அருகே ஏரி உள்ளது. இது தொடர்மழையின் காரணமாக நிரம்பியது. தொடர்ந்து பல மாதங்கள் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் வருவதாலும், ஏரி நிறைந்ததாலும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
போர்வெல்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் இப்பகுதி குடியிருப்புவாசிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.