குமாரபாளையத்தில் கணவர், மாமியார் மீது பெண் புகார்
குமாரபாளையத்தில் கணவர், மாமியார் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.;
குமாரபாளையத்தில் கணவர், மாமியார் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.
குமாரபாளையம் வேதாந்தபுரம் சி.எஸ்.ஐ. சர்ச் பகுதியில் வசிப்பவர் மோனிஷா பிரீத்தி, 30. இவரும், இவரது கணவரும், இவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். 8 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவரது கணவர் தனியார் கப்பலில் வேலை செய்து வருவதால் இவருக்கும், மாமியாருக்கும் அடிக்கடி சண்டை வந்ததால், இவர் தன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் ஊருக்கு வந்தால் மட்டும் கணவர் வீட்டிற்கு செல்வார். ஜூன் 20ல் இவரது கணவர் ஊரிலிருந்து வந்து, தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். ஜூன் 23ல் கணவர், மாமியார் ஆகிய இருவரும், மோனிஷாவிடம் வாய் தகராறில் ஈடுபட்டு, ஒரு கட்டத்தில் கைகளால் இருவரும் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த மோனிஷா தன் கணவர் மற்றும் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார்.