பெண் குழந்தை இறந்ததால், சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார்

குமாரபாளையம் அருகே மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை இறந்ததால், சந்தேகத்தின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார்.;

Update: 2025-03-23 11:08 GMT

பெண் குழந்தை இறந்ததால், சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார்


குமாரபாளையம் அருகே மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை இறந்ததால், சந்தேகத்தின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் போலீசில் புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் லோகேஸ்வரி. இவருக்கு 2024, மே 16ல், குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் இவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று விட்டார். கிராம சுகாதார செவிலியர் பன்னீர்செல்வி விசாரிக்கையில், குழந்தை, தாய் இருவரும், கரூர் மாவட்டம் நொய்யல் என்ற ஊரில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் தடுப்பூசி அனைத்தும் அங்கு போடப்பட்டதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்து, குடும்பத்தினர் வசம் கேட்ட போது, குழந்தை பிறந்து ஒரு மாதத்தில், பால் குடிக்கும் போது, புரை ஏறி, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டது என்று கூறியுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், இந்த குழந்தை சாவில் சந்தேகம் உள்ளதாகவும், விசாரணை செய்யவும் வேண்டி, வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீ செந்தாமரை குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News