'குடிக்காதிங்க அப்பா' என மகன் அட்வைஸ்: விரக்தியில் தந்தை தற்கொலை

குமாரபாளையத்தில், குடிக்காதீர்கள் என்று மகன் சொன்னதால், தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-25 14:00 GMT

குமாரபாளையம் வாசுகி நகரில் வசிப்பவர் நந்தகுமார், 42. டிரைவர். இவருக்கு ஜானகி, 39, என்ற மனைவியும், ஆகாஷ், 22, கார்த்திகேஸ்வரன், 17, என்ற இரு மகன்கள் உள்ளனர். நந்தகுமார் குடிப்பழக்கம் உள்ளவர். நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் வேலைக்கு செல்லாமல் குடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அவரது இளையமகன், இப்படி செய்கிறீர்களே? என்று கேட்டுள்ளார். அதற்கு நந்தகுமார், தன்னை யாரும் கேட்கக்கூடாது என்று கூறியுள்ளார். இதுபற்றி,  மாடியில் உள்ள தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு கீழே வந்த போது, பூஜை அறையில் நந்தகுமார் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதை பார்த்து, குடும்பத்தினர் பதறினர். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் சடலத்தை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News