கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி, உடலை மீட்ட தீயணைப்பு படையினர்

குமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயியின் உடலை, தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.;

Update: 2021-09-03 12:00 GMT

குமாரபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த, விவசாயியின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

குமாரபாளையம் அருகே தெற்குபாளையம் ரிலையன்ஸ் பங்க் அருகே வசிப்பவர் சரவணன்,. விவசாயி. இவர் தன் விவசாய நிலத்தில் நாற்று அமைக்க விதை நெல் மூட்டையை எடுத்துக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது விவசாய திறந்த வெளி கிணறு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்க முயற்சி செய்தனர். இது குறித்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்,

நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் வந்த குழுவினர், கிணற்றில் குதித்து 30 நிமிடம் போராடி, சரவணன் உடலை மீட்டனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.

Tags:    

Similar News