அங்கன்வாடி மையத்திற்கு மின்விசிறி வழங்கிய சமூக ஆர்வலர்கள்
குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் மின்விசிறி வழங்கினர்.;
அங்கன்வாடி மையத்திற்கு மின்விசிறி வழங்கிய
சமூக ஆர்வலர்கள்
குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் மின்விசிறி வழங்கினர்.
கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பெரியவர்களால் கூட சமாளிக்க முடியாத நிலை உள்ளது. சிறுவர், சிறுமியர் இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் திணறி வருகிறார்கள். 5 வயதிற்குட்பட்ட உழவர் சந்தை அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் , வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் சித்ரா, மோகன் ஆகியோர், அந்த அங்கன்வாடி மைய குழந்தைகளுக்காக மின் விசிறியை வழங்கி உதவினர். இதற்கு அங்கன்வாடி மைய நிர்வாகிகள், அப்பகுதி பெற்றோர் உள்பட அனைவரும் பாராட்டினர்.
படவிளக்கம் :
குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு சமூக ஆர்வலர்கள் மின்விசிறி வழங்கினர்.